2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நிந்தவூர் அல் அஷ்றக் மாணவி சாதனை

Niroshini   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலையில் பௌதீக விஞ்ஞானதுறையில் கல்வி பயிலும் ஏ.எச். இன்பாசா ஹமீட், பிரதேச மற்றும் தேசிய மட்டங்களில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

2015.10.22இல் சுற்றாடல் முன்னோடிக்கான ஜனாதிபதிப் பதக்கத்தையும் 2015ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கிடையேயான இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் தரம் 12,13 பிரிவில் சக்தி வளமும்,சூழல் பாதுகாப்பையும் பேணக்கூடிய வகையிலான சூழலுக்கு நேயமிகு சிக்கன சிரட்டைக்கரி சுடும் நவீன முறையில் அமைக்கப்பட்ட சூளையினை உருவாக்கி சாதனை படைத்தமைக்காக தங்கப்பதக்கத்தையும் பெற்றிருந்தார்.

இதேவேளை,2011ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கலைப்போட்டியில் மாவட்ட ஓவியருக்கான விருதை பெற்றிருந்ததுடன் சுற்றாடல் முன்னோடிக்கான ஜனாதிபதி விருது பெற்றவர்களில் விசேட விருது பெற்ற 16 மாணவ மாணவிகளில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட இன்பாசா, கடந்த நவம்பர் 28ஆம் திகதி முதல் டிசெம்பர் 04ஆம் திகதி வரை இந்தியா, புதுடெல்லிக்கு கல்விச் சுற்றுலா ஒன்றுக்கு செல்வதற்கான வாய்ப்பைப்பெற்று சென்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .