2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நிந்தவூரில் 3 உணவகங்களை தற்காலிகமாக மூட உத்தரவு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 23 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்த மூன்று உணவகங்களை தற்காலிமாக மூடுமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல், இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், மேற்படி மூன்று உணவகங்களிலும் சுகாதார முறையைப் பேணி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொதுச் சுகாதாரப் பரிசோதர்களுக்கு நீதவான் பணித்துள்ளார்.  

மேலும், நான்கு உணவக உரிமையாளர்களுக்கு தலா 5,000 ரூபாய் படி அபராதத்தை நீதவான் விதித்துள்ளார்.

நிந்தவூர்ப் பிரதேசத்தில் உள்ள 10 உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்; திங்கட்கிழமை  (20) திடீர்ச் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில்; வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையிலேயே, மூன்று உணவகங்களை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், நான்கு உணவக உரிமையாளர்களுக்கு அபராதமும் நீதவான் விதித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X