Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்,எஸ்.எம்.எம்.றம்ஸான்
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் ஸ்தாபக உறுப்பினரான அமரர் கமலாம்பிகை லோகிதராஜாவை நினைவுகூரும் நிகழ்வும் கமலதீபம் எனும் நினைவுமலர் வெளியீட்டு நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை நால்வர் கோட்டம் மண்டபத்தில் பேரவையின் தலைவர் தேசமான்ய ஜலீல் ஜீ தலைமையில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் பொதுச்செயலாளரும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய வி.ரி.சகாதேவராஜாவின் வழிகதட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில்,வரவேற்புரையை கலாநிதி பரந்தன் கந்தசாமி,தலைமையுரையை தேசமான்ய ஜலீல் ஜீ, நினைவுப் பேருரையை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் செ.யோகராஜாவும் கல்முனை உவெஸ்லி பாடசாலையின் அதிபர் வி.பிரபாகரன் மற்றும் தேசகீர்த்தி ஏ.ஏ.கபூர் ஆகியோர் நிகழ்த்தினர்.
இதன்போது,நினைவு மலரின் முதல் பிரதியை பேரவையின் தலைவர் ஜலீல் ஜீ, அமரர் திருமதி கமலாம்பிகை லோகிதராஜாவின் மகள் சுபோசனா விவேகானந்தராஜாவுக்கு வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago