2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்: திலீபன்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 11 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டவர்களினால் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகள் சங்கத் தலைவர் எம்.திலீபன், தெரிவித்தார்.

வேலை வாய்ப்புகளை வழங்குமாறு கோரி கடந்த வருடம்  கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக தாங்கள்  மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைமைகளினால் முன்வைக்கப்பட்ட உறுதிமொழி அவர்களினால் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் புதிதாக கோரப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஏற்கெனவே பரீட்சைக்குத் தோற்றி புள்ளிகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனம் வழங்கப்படும் என்பதுடன், புதிதாக பரீட்சை நடத்தப்படமாட்டாது எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, முதலமைச்சர் உள்ளிட்டவர்களினால் உறுதிமொழி வழங்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் உறுதிமொழியை மீறி தங்களை ஏமாற்றியுள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் கூறினார்.
எனவே, இது தொடர்பில் உரிய அரசியல் தலைவர்கள் தலையிட்டு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X