2025 ஜூலை 16, புதன்கிழமை

நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கு நிதியுதவி

Kanagaraj   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், 50 ஆயிரம் ரூபாய் நிதியை அவரின் 2015ஆம் ஆண்டுடின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளதாக கழகத்தின் தலைவர் தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் அதிபர், இன்று சனிக்கிழமை (12) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்திலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கழக அங்கிகள் இல்லாத குறையை கடந்த மாதம் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் எடுத்துக்கூறியபோது அந்தக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்வதாக அமைச்சர் வாக்குறுதியை வழங்கியமைக்கு அமைவாக இந்த நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளதாகவும் தெவித்தார்.

இதேவேளை, கழகத்தின் உதைபந்தாட்ட குழுவினரின் வளர்ச்சிக்காகவேண்டி கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மு.காவின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறை செயலாளர் ஏ.எல்.தவம், தன்னுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 25 ஆயிரம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் உறுப்பினர் எ.எல்.தவம் ஆகியோர்களுக்கு நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் வீரர்கள் என்றும் நன்றியுள்ளவர்களாகவும், அவர்களுகளின் அரசியல் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவார்கள் எனவும் கழகத்தின் தலைவர் தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் அதிபர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .