2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நீர்ப்பாசனக் குளங்கள் புனரமைக்கப்படும்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 13 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனிபா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்திலுள்ள நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண நீர்ப்பாசன, கால்நடைகள் அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் தெரிவித்தார்.

மேலும், பொத்துவிலிலுள்ள நீர்ப்பாசன பொறியியலாளர் உப –அலுவலகம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகமாக தரம் உயர்த்தப்படுமென்பதுடன், கால்நடைகளை வைத்திருப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படுமெனவும் அவர் கூறினார்.

தனது அமைச்சின் அதிகாரிகளுடன் பொத்துவில்  பிரதேசத்துக்கு செவ்வாய்க்கிழமை (12) மாலை  சென்று அங்குள்ள நீர்ப்பாசனக் குளங்களை பார்வையிட்ட பின்னரே, அவர் இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X