2025 ஜூலை 16, புதன்கிழமை

நீர் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் ஆராய்வு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ், யூ.எல். மப்றூக்

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாட்டின் சகல மாகாணங்களையும் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளை சனிக்கிழமை (12) தமது அமைச்சின் கேட்போர் கூடத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். 

இக்கலந்துரையாடலில் நீர் விநியோகம் தொடர்பிலான இடர்பாடுகள், பிரச்சினைகள், தேவைப்பாடுகள் மற்றும் நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களுக்கும் நீர் விநியோகத்தை துரிதப்படுத்தலுக்கான செயல் திட்டங்கள் தொடர்பில் ஐந்து மணி நேரம்; கலந்துரையாடினார். 

இதில் அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.மங்கலிக்கா, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் கே.ஏ.அன்சார் உட்பட உயர் அதிகாரிகள்; பலர் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .