2025 மே 21, புதன்கிழமை

நெல்லுக்கான கொடுப்பனவை வழங்கவும்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 14 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபையால், அரசாங்க உத்தரவாத விலைக்கு  கொள்வனவு செய்யப்பட்ட நெல்லுக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை. எனவே, தங்களிடம் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லுக்கான கொடுப்பனவை வழங்குமாறு  விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

இந்த மாவட்டத்தில் இம்முறை பெரும்போகச் செய்கைக்கான அறுவடை முடிவடைந்த நிலையில்,  அரசாங்க உத்தரவாத விலைக்கு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு இடம்பெறுகின்றது.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட நெல்லுக்கான கொடுப்பனவை வழங்காமல் அரசாங்கம் தாமதப்படுத்துவதால் தாம் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், நெற்செய்கை மற்றும் அறுவடையின்போது ஏற்பட்ட செலவீனத்தை ஈடுசெய்ய முடியாமலுள்ளதாகவும் அவ்விவசாயிகள் கூறினர்.

இது தொடர்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அம்பாறை மாவட்டப் பிராந்திய முகாமையாளர் கே.ரத்நாயக்கவிடம் கேட்டபோது, 'அம்பாறை மாவட்டத்தில் 35,000 மெற்றிக்தொன் நெல்லை அரசாங்க உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் பணித்துள்ளது. இதற்கமைய, மாவட்டத்திலுள்ள பிராந்திய நிலையங்கள் மூலமாக நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது.

அரசாங்கத்தின் நிதி கிடைப்பதில் சற்றுத் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கொள்வனவு செய்யப்பட்ட நெல்லுக்கான கொடுப்பனவை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் நிதி கிடைத்தவுடன் அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும்' என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .