2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

நுளம்புகள் பெருகும் சூழலை வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 05 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை வைத்திருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன் இன்று  வியாழக்கிழமை தெரிவித்தார்.

டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  
தற்போது மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளதால்;  அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்புகள்  பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நுளம்புகள் பெருகாதவாறு சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுற்றுப்புறத்திலுள்ள நீர் நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப்படுத்தல், நீர் தேங்கி உள்ள இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல் ஆகியவற்றின் மூலம் நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்தமுடியும்

மேலும் தென்னங்குறும்பை, யோகட் கப், வெற்றுப் போத்தல்கள், வெற்று டயர்கள், பொலித்தீன் கழிவுகள் ஆகியவற்றையும் அகற்றவேண்டும்.

வெற்றுக்காணிகளை வைத்திருப்பவர்கள் ஒரு வாரகாலத்தினுள் துப்பரவு செய்ய வேண்டுமென்பதுடன்,  தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X