Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மே 25 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பொருட்டு சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் சேகரிக்கப்பட்ட நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையிலான அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு நிலையத்தில் ஒப்படைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றைக் கொண்டு செல்லும் குழுவினரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(23) இரவு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் முன்றலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் முன்னிலையில், பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சேகரிக்கப்பட்ட ஒரு லொறி அடங்கிய பொருட்கள் மற்றும் சுமார் 15 இலட்சம் ரூபாய் பணத்துக்கான காசோலை என்பன குழுவினரிடம் கையளிக்கப்பட்டன.
சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா தலைவரும் பள்ளிவாசல் உப தலைவருமான மௌலவி யூ.எல்.எம்.காசிம் தலைமையிலான பயணக் குழுவில் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.தில்சாத், மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் எஸ்.எம்.கலீல், வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.சத்தார் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago