2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2016 மே 03 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

அம்பாறை, அட்டாளைச்சேனை அரச கால்நடை வைத்தியசாலையால் பண்ணையாளர்களுக்கான  நடமாடும்  சேவை இன்று செவ்வாய்க்கிழமை பாலமுனை ஹூஸைனியா நகர் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது பண்ணையாளர்களை பதிவு செய்தல், மாடுகளுக்கான காது அடையாளம் இடுதல், கால்நடை மற்றும் கோழிகளுக்கு தடுப்பு மருந்து வழங்குதல், கால்நடைகளுக்கான வைத்திய சேவை நோய்த்தடுப்பு சம்மந்தமான ஆலோசனை வழங்கல், ஆடு, மாடுகளுக்கான செயற்கைமுறை சினைப்படுத்தலும் அது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.

இதில் பாலமுனைப் பிரதேசத்திலுள்ள 150க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X