2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2016 மே 12 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று பொலிஸாரின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை, எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை பட்டியடிப்பிட்டி அல் றஹிமியா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது பிறப்பு, இறப்புப்பதிவு மற்றும் திருமணப்பதிவு மேற்கொள்ளுதல், பொலிஸ் முறைப்பாட்டுக்கான பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுதல், பொலிஸ் போக்குவரத்துப் பிரிவால் மக்களுக்கு வழங்க வேண்டிய சேவை, கமநலச் சேவை மற்றும் இணக்க சபையால் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை, பல்சிகிச்சை,  சட்ட ஆலோசனை வழங்குதல் தொடர்பானவை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X