2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நபரைக் காயப்படுத்தியவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா    
                               
பொத்துவில் பிரதேசத்தில் மதுபோதையில் முச்சக்கரவண்டி செலுத்தி ஒருவரைக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரொருவரை, விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வஹாப்தீன், நேற்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டுள்ளார்.

பொத்துவில் பிரதான வீதயில் வைத்து முச்சக்கரவண்டியால் மோதி, ஒருவரைக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்ற வேளையிலேயே பொத்துவில் பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை (11) சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை, பொத்தவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வஹாப்தீன் முன்னிலையில் நேற்று (12) ஆஜர்செய்த போது எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X