2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நல்லிணக்கம் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம்

Princiya Dixci   / 2016 ஜூலை 02 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

போருக்குப் பின்னரான சூழலில் சாத்தியமான நல்லிணக்க பொறிமுறைகளை அமுல்படுத்துவதற்காக பொதுமக்களிடமிருந்து அபிப்பிராயத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான மக்களுக்கு வழிப்புணர்வூட்டல் வேலைத்திட்டம், நல்லிணக்க செயற்பாடுகள் பொறிமுறைகள் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலணியினால் மேற்கொள்ளப்படவுள்ளதாக நல்லிணக்கச் செயற்பாடு பொறிமுறைகள் அம்பாறை மாவட்டத் தலைவர் சட்டத்தரணி எஸ்.எச்.எம். மனார்டீன் தெரிவித்தார்.

நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பாதிக்கப்பட்ட மக்களுடனான அபிப்பிராயங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தும் கருத்தரங்கு, இன்று சனிக்கிழமை (02) ஆலையடிவேம்பில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இன முறன்பாடு காரணமாகவும், ஏனைய வன்முறை காரணமாகவும் இடம்பெற்ற உரிமை மீறல்களும் ஏனைய பாதிப்புக்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்காகவும் நீதி, உண்மை ஆகியவற்றுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும், நல்லிணக்கத்துக்கான பொறிமுறைகள் உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் 2015 ஒகஸ்ட் மாதத்தில் உறுதியளித்திருந்தது.

இதனடிப்படையில் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அரசாங்கத்துக்கு மத்திய செயலணி ஊடாக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 09ஆம் திகதி பன்னலகமையிலும், 10ஆம் திகதி அக்கரைப்பற்றிலும், 16ஆம் திகதி வீரமுனையிலும் மற்றும் 17ஆம் திகதி மகஓயா ஆகிய பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகள் பெறப்படவுள்ளன.

கடந்த காலப் போரில் பாகிக்கப்பட்ட மக்கள் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு சமூகம் தந்து அவர்களது இழப்பீடுகளை வாய் மூலமாகவும் எழுத்து மூலமும் சமர்ப்பிக்க முடியுமென சட்டத்தரணி எஸ்.எச்.எம். மனார்டீன் தெரிவித்தார்.

மேலதிக தகவல்களை 0776170300 எனும் அலைபேசி இலத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X