2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நஷ்டஈடு தொகையை அதிகரிக்க கோரும் தனி நபர் பிரேரணை

Niroshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போது முழுமையாக பாதிக்கப்படும் வீடுகளுக்கு வழங்கப்படும் நஷ்டஈட்டின் தொகையை 01 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க கோரும் தனிநபர் பிரேரனை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தில் ஏற்படும் அனர்த்தங்களினால் முழுமையாக பாதிக்கப்படும் வீடுகளுக்கு நஷ்டஈடாக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த தொகையினைக் கொண்டு அனர்த்தங்களின் போது முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனவே, எதிர்வரும் 2016ஆம் ஆண்டின் வரவு-செலவு திட்ட நிதியில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் அனர்த்தங்களின் போது முழுமையாக பாதிக்கப்படும் வீடுகளுக்கு வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகையை 01 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி தனி நபர் பிரேரனையை எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் மாகாண சபை உறுப்பினர் எம்.எஎஸ். உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X