2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

போக்குவரத்து சமிக்ஞையை வெளிப்படுத்தும் ரோபோ கண்டுபிடிப்பு

Princiya Dixci   / 2016 ஜனவரி 06 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

பாடசாலை மாணவர்கள், பாதசாரிக்கடவையைக் கடப்பதற்கு உதவியாக போக்குவரத்து சமிக்ஞையை வெளிப்படுத்தும் ரோபோவை, குளிர்சாதனப்பெட்டி திருத்தும் தொழில்புரியும் பிரின்ஸ் சந்திரசேன என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்த மின் தொழில்நுட்பக் கருவியைக் கொண்ட ரோபோவை பாடசாலை ஆரம்பிக்கும் போது பாதையின் நடுவில் வைத்து கையிலுள்ள தொலைஇயக்கக்கருவியின் (ரிமோல் கொண்ரோல்) ஆழியை (சுவிச்) அழுத்தினால் இரு பக்கங்களிலும் வரும் வாகனங்களையும் நிறுத்தும் சமிஞ்சை மின் ஒளிரும். அதற்கேற்ப கைகள் அசையும். அப்பொழுது மாணவர்கள் பாதையை இலகுவாகக் கடக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த புதிய கண்டுபிடிப்புக்காக சமீபத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் சான்றிதழ் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். 

பால் பண்ணையாளர்களின் நன்மை கருதி புதிய பால் குளிரூட்டி என சிறு பராயம் முதல் இன்று வரை புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்து பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், சர்வதேச மட்டத்தில் வருடாந்தம் நடத்தப்படும் புதிய கண்டு பிடிப்பாளர் போட்டியில் பங்கு கொண்டு முதல் பரிசினையும் பெற்றுள்ளார்.  

கைகளை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மவுசு பயன்படுத்தும் நவீன முறைக் கருவியை கண்டு பித்தமைக்காக சுவிட்ஸர்லாந்து நாட்டில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு முதல் பரிசினைப் பெற்றுள்ளார். 148 நாட்டவர்கள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X