2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

புகைப்படக்கலை செயலமர்வு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 08 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பில் ஊடகக் கற்கைநெறிகளை நடத்திவரும் வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகம், இளம் புகைப்பட படைப்பாளிகள் மற்றும் பத்திரிகை புகைப்படப்பிடிப்பாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனையிலுள்ள அதன் நிறுவக மண்டபத்தில் நடத்தவுள்ளது.

சென்னையிலிருந்து வருகைதரும் புகைப்படப் பத்திரிகையாளரும் மாற்று சினிமாவுக்கான செயற்பாட்டாளருமான ஜீ.கண்ணன் இந்த கருத்தரங்கை நிகழ்த்தவுள்ளார். அவருடன் யாழ்ப்பாணத்திலிருந்து புகைப்பட பத்திரிகையாளரும் ஊடகவியலாளருமான      ரி.ஜெயராஜூம் இதழியலில் புகைப்பட நுணுக்கங்கள் தொடர்பாக விரிவுரையாற்றவுள்ளார்.
புகைப்படவியலின் அடிப்படைகள், கருவி பயன்பாடு, புகைப்படவியலும் கலாசாரமும் புகைப்படவியலும் ஊடகங்களும் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெறும். முடிவில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

இக்கருத்தரங்கில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் 0652222832, 0758265824 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தமது பெயரைப் பதிவு செய்துகொள்ளுமாறு வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகத்தின் இணைப்பாளர் பிரியா சிவமோகன் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 17ஆம் திகதி புகைப்படக்கலை டிப்ளோமா கற்கைநெறிகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் ஆர்வமுள்ளவர்களை தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X