2025 ஜூலை 16, புதன்கிழமை

போசாக்கு உணவு பொதிகள் விநியோகம்

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் சிறுவர்,பெண்கள் விவகார அபிவிருத்தி அமைச்சினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஜுலை, ஓகஸ்ட் மாதத்துக்கான போசாக்கு உணவு பொதிகள் இன்று செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.

ஒலுவிலில் 01 நிலையத்திலும் பாலமுனையில் 01 நிலையத்திலும் தீகவாபி 01 நிலையத்திலும் ஆலம்குளத்தில் 01 நிலையத்திலும் அட்டாளைச்சேனையில் 04 நிலையத்திலும் உணவுப் பொதிகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிணங்க,ஒலுவிலில் 350 குடும்பங்களுக்கும் பாலமுனையில் 340 குடும்பங்களுக்கும் அட்டாளைச்சேனையில் 750 குடும்பங்களுக்கும் ஆலம்குளத்தில் 30 குடும்பங்களுக்கும் தீகவாபியில் 90 குடும்பங்களுக்குமாக மொத்தம் 1,560 உணவுப் பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முட்டை, நெத்தலி கருவாடு, அரிசி,பயறு,சோயா,கடலை,கச்சான் போன்ற உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

02 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களுக்கான உணவுப் பொதி வழங்குவதற்குரிய நிதி கிடைக்கும் பட்சத்தில் இம் மாத இறுதிக்குள் அவையும் வழங்கப்படுனெவும் உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X