2025 மே 22, வியாழக்கிழமை

பாடசாலைகள் மகிழ்ச்சியான இடமாக இருக்கவேண்டும்

Gavitha   / 2016 ஜனவரி 22 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஜி.ஏ.கபூர்

பாடசாலைகள் மகிழ்ச்சிகரமாக கற்கும் இடங்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலம் சிறந்த ஒழுக்கமும் ஆளுமையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று ஓய்வு பெற்ற அக்கரைப்பற்று தேசியக் கல்லூரியின் அதிபரும் முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரியுமான எம்.ஐ.எம்.சஹாப்தீன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அர்-ரஹீமியா வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (21) வித்தியாலய அதிபர் ஏ.எல்.ஸெய்னுதீன் தலைமையில் இடம்பெற்ற தரம் - 03 முதன்மை நிலை -02 மாணவர்களுக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்பம் என்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கடந்த வருடம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் இப் பாடசாலையிலிருந்து தோற்றி சித்தியடைந்த எம்.எச்.லீனா ஸைனப் (179), ஏ.எச்.ஹிஸ்மா (152) ஆகிய மாணவர்களுக்கு, பட்டியடிப்பிட்டடி ஜும்ஆப் பள்ளியின் முன்னாள் தலைவரும் சமூகசேவையாளருமான அல்-ஹாஜ் ஏ.எம்.எம்.சஹீத் ஜே.பி.யினால் பணப்பரிசு வழங்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X