2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பெண்களும் முறையிட வேண்டும்

Kogilavani   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி. சுகிர்தகுமார்

பெண்கள் தங்களது முறைப்பாடுகளை தயக்கமில்லாமல், பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியிலேயே பதிவு செய்துகொள்ள முடியுமென அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி திருமதி இந்திராணி யாப்பா, நேற்று புதன்கிழமை (09) தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் இம்மாதம் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டுவரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் நிகழ்வுகளின் ஓர் அங்கமாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், பெண்கள், தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள் தொடர்பாகத் தமது பிரிவில் முறைப்பாடுகளைச் செய்வதில் சிங்கள மொழி தெரியாமை ஒரு பிரச்சினையாகக் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.

எனினும், அண்மைக்காலத்தில் பொலிஸ் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பின்போது பெருமளவு தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் உள்வாங்கப்பட்டு அக்கரைப்பற்று உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது எவ்விதத் தயக்கமுமில்லாது பெண்கள் தமிழிலேயே தமது முறைப்பாடுகளைப் பதிவுசெய்ய முடியுமெனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, பெண்கள் பொலிஸ் நிலையத்துக்கு வரத் தயங்குவதால் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் ஒருபோதும் குறைவடையாதெனவும் மாறாக குற்றம் புரிகின்றவர்களுக்கு ஒருவித மறைமுக அங்கிகாரத்தை வழங்குவதாகவே அமையும் எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .