2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பெண்ணைக் கடத்திய ஐவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 15 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இரு பிள்ளைகளின்  தாய் ஒருவரை  கடத்திச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் ஐந்து பேரை நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மே மாதம் 27ஆம் திகதி இரவு தனது வீட்டினுள் புகுந்த 06 பேர், முச்சக்கரவண்டியில் தன்னைக் கடத்திச் சென்று இலுக்குச்சேனை இடத்தில் வைத்திருந்துவிட்டு, மறுநாள் தன்னை விடுவித்ததாக பொலிஸில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த  பொலிஸார், இந்தச் சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகி இருப்பதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இப்பெண்ணின் கணவரே பிரதான சந்தேக நபர் எனவும் அவர் அவர் தற்போது பிரிந்து வாழ்வதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X