2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தைய்யல் இயந்திரம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த ஏழு பெண் தலைமைத்துவக்கு குடும்பங்களுக்கு தைய்யல் இயந்திரங்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) வழங்கப்பட்டன. 

ஒவ்வொரு தைய்யல் இயந்திரமும் 22,000 ரூபாய் பெறுமதியுடையது. 2015ஆம் ஆண்டின் அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டிலேயே இத்தைய்யல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. 

இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை  அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இவ்வுதவி அளிக்கப்பட்டது. 

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம். இராஜேஸ்வரன், கல்முனை மாநகர சபை உறுப்பினரான கே. ஏகாம்பரம், ஏ.விஜயரட்ணம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X