2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பெண் முகாமையாளர் கொலை: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2016 மார்ச் 15 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை சர்வோதய நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளரான சுலக்சனாவை கொலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் விளக்கமறியல், எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி, குறித்த நிறுவனத்தில் கடமையில் இருந்த போது, முகாமையாளர் சுலக்சனா வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே அந்நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது, கொலைச் சந்தேக நபருக்கு ஆதரவாக சட்டத்தரணி எவரும் ஆஜராகக் கூடாது எனக்கோரி நேற்று கல்முனை நகரில் பெண்கள் உட்பட பெரும் திரளான மக்கள் ஒன்றிணைந்து ஆரப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால், சந்தேக நபருக்காக நீதிமன்றில் எந்தவொரு சட்டதரணியும் ஆஜராகி இருக்கவில்லை. இதன்பின்னர் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி பயாஸ் ரஸ்ஸாக்கின் உத்தரவுக்கமைய, சந்தேக நபருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X