Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
தெஹியத்தக்கண்டி முறுத்தகஸ்பிட்டிய விகாரையில் அமைக்கப்படவுள்ள பௌத்த போதனை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (27) முறுத்தகஸ்பிட்டிய விகாரையின் பொறுப்பதிகாரி பதவிய சமீத்த ஹிமி தலைமையில் நடைபெற்றது.
இவ் வைபத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரின் தெஹியத்தக்கண்டி இணைப்பு செயலாளர் எம்.எஸ்.ரவூப், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தெஹியத்தக்கண்டி இணைப்பாளர் ரணவீர திஸாநாயக்க உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,
தனது வெற்றிக்காக அயராது பாடுபட்ட தெஹியத்தக்கண்டி பிரதேச மக்களை ஒருபோதும் மறக்க மாட்டேன். அத்துடன் பிரதேசத்தின் தேவைகள் அறிந்து என்னால் முடியுமான உதவிகளை செய்வதற்கு சித்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, தெஹியத்தக்கண்டி பிரதேசமக்கள் தமது பிரதேச மற்றும் தனிப்பட்ட தேவைகள் குறித்த மகஜர்களை பிரதி அமைச்சரிடம் கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
41 minute ago
52 minute ago