2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பொத்துவில் நீர்பாசன பொறியியலாளர் நியமனம்

Gavitha   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்திலுள்ள மாகாண நீர்ப்பாசன திணைக்கள உப அலுவலகத்தின் புதிய நீர்ப்பாசனப் பொறியியலாளராக, எந்திரி. ரீ.தவராஜா, கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொத்துவில் நீர்ப்பாசன அலுவலகத்தில் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக தொழில்நுட்ப சேவையில் விஷேட தரம் கொண்டு அலுவலகப் பொறுப்பதிகாரியாக இயங்கி வந்த பி.டி.ஏ.ஜெயகுமார்,  இடமாற்றம் பெற்று சென்றதன் பின்னரே, அவருடைய வெற்றிடத்துக்காக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொத்துவில் அலுவலகத்துக்கான பொறியியலாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர், தம்பிலுவில் நீர்ப்பாசனப் பொறியியலாளராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X