2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பொத்துவிலில் கொடுவா மீன் வளர்ப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவிலில் கொடுவா மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பொத்துவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை (26) மாலை வருகைதந்த  அமைச்சர், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோதே இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'திருகோணமலை மாவட்டத்தில் கொடுவா மீன்களை  தனியார்  வளர்த்து சிறந்த இலாபம் அடைகின்றனர். பொத்துவிலிலும்;  கொடுவா மீன் வளர்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன்' என்றார்.

'மேலும், மீன்பிடித் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள உங்களின்  நன்மை கருதி கடலினுள் கூடுகளை  வைத்து மீன்களை பிடிக்கும் நுட்பத்தையும் இங்கு அறிமுகப்படுத்தவுள்ளேன்' எனத் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X