2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பொத்துவில் வைத்தியசாலைக்கு நிதி

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 17 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இதர தேவைகளுக்காக மத்திய அரசு  இரண்டு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதத்துக்குள் பூர்த்தியாக்கப்படுமென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்நஸீர் தெரிவித்தார்.

பொத்துவில் வைத்தியசாலையில் நிலவும்  குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிவதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அவ்வைத்தியசாலைக்கு திங்கட்கிழமை (16) விஜயம் செய்தார்.

இதன்போது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை வைத்தியர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினரைச் சந்தித்துக் கேட்டறிந்தார். மேலும், கடந்த 09ஆம் திகதி வைத்தியர்களையும் மருத்துவ தாதியர்களையும் கடமையைச் செய்யவிடாது பங்கம் ஏற்படுத்தப்பட்டமை. இதற்காக முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் தொடர்பிலும் அவர் கேட்டறிந்தார்.

இதற்கு பதிலளித்த அவர், 'பொதுமக்களுக்கும் வைத்தியர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X