2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பொத்துவில் வைத்தியசாலைக்கு நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்குத் தேவையான வைத்திய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு சுகாதார சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைஷால் காசீம் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதியமைச்சரின் பொத்துவில் பிரதேச இணைப்பாளர் எம்.எச்.அப்துல் றஹீம் தெரிவித்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் சத்திர சிகிச்சை பிரிவுக்கான உபகரணங்களை  கொள்வனவு செய்வதற்கு இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நவீன வெளி நோயாளர் விடுதி மற்றும் ஆண், பெண் நோயாளர் விடுதியை நிர்மாணிப்பதற்கும் 06 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் பிரதியமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X