2025 ஜூலை 16, புதன்கிழமை

பொத்துவில் வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருமாறு கோரி குரல் அற்றோர்களுக்கான குரல் அமைப்பினரால் பொத்துவிலில் சனிக்கிழமை (12) கையெழுத்துவேட்டை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.  

பொத்துவில் பிரதேசத்தில் சுமார் 40,000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தக் குடும்பங்கள்; பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய சேவைகளைப் பெறவேண்டியுள்ளது. இருப்பினும், இந்த வைத்தியசாலையில் போதியளவில்  ஆளணி மற்றும் வைத்திய வசதிகளின்மையால், நோயாளிகள் சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக சுமார் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு செல்லவேண்டியுள்ளது. அல்லது, மொனராகலை வைத்தியசாலைகளுக்கு செல்லவேண்டியுள்ளது. இந்நிலையில்,  பொத்துவில் ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கொண்டுவருமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .