Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜனவரி 17 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு சிறுநீரக சிகிச்சைப் பிரிவு, அவசர விபத்து சிகிச்சைப் பிரிவு மற்றும் வைத்தியர்கள் தங்குவதற்கான சகல வசதிகளுடனும் கூடிய விடுதியையும் இரண்டு வருடங்களுக்குள் நிர்;மாணித்துத் தருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (16) விஜயம் செய்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளுக்கு பல தேவைகள் காணப்படுகின்றன. இத்தேவைகள்; அனைத்தையும் உடனடியாகவும் ஒரே தடவையிலும்; என்னால் நிவர்த்தி செய்ய முடியாமலுள்ளது. இந்தத் தேவைகளை ஒன்றன் பின் ஒன்றாகவே என்னால் செய்துதர முடியும்' என்றார்.
இதன்போது பொத்துவில் வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களின் பிரச்சினை தொடர்பிலும் அமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.
31 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
52 minute ago
1 hours ago