2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பொது மன்னிப்புக் காலப்பகுதிக்குள் ஆயுதங்களை ஒப்படைக்கவும்

Princiya Dixci   / 2016 மே 03 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

நாட்டினுள் பயன்படுத்தப்படும் சட்டவிரோத துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் எதிர்வரும் 06ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தில் மக்களின் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளன.

தங்களிடம் சட்டவிரோத ஆயுதம் இருப்பின் அதனை ஒப்படைக்காமல் இருக்கும் பட்சத்தில் துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் முன்னேற்பாடுகளின் படி கடுமையான சட்டம் நடைமுறைப்புடுத்தப்படுமெனவும் பொது மன்னிப்பு காலத்தினுள் கையளிக்கும் ஆயுதங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் அவ் சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிகளை அண்மையிலுள்ள மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் கையளிக்க முடியும்.

சன்னத் துப்பாக்கி அல்லது அதை ஒத்த தீ ஆயுதத்துக்காக 5,000 ரூபாயும் பிஸ்டல் அல்லது ரிவால்வர் ஒன்றுக்காக 10,000 ரூபாயும், ரி56 தீ ஆயுதமொன்றிக்காக 25,000 ரூபாயும் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களை அண்மையிலுள்ள பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X