2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதிய இணைப்புச் செயலாளர்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 04 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரின்; இணைப்புச் செயலாளராக இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.ஜெமில் காரியப்பர் நியமிக்கப்படவுள்ளார்.

மத்திய குழுவின் செயலாளர் யூ.எல்.எம்.ஜப்ரி தலைமையில், மாகாண சுகாதார அமைச்சருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் மத்திய குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு, அட்டாளைச்சேனையிலுள்ள மாகாண சுகாதார அமைச்சரின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (03) இரவு நடைபெற்றது. இதன்போதே, மாகாண சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளராக எம்.எஸ்.ஜெமில் காரியப்பரை நியமிப்பதற்கு மத்திய குழுவினர் ஏகமானதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப்; ஹக்கீம் மாகாண சுகாதார அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .