2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

புதிய நியமனம்

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கான உதவிப் பிரதேச செயலாளராக தங்கையா கஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நியமிக்கப்பட்டுள்ள இவர் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையில் பொது முகாமைத்துவ உதவியாளராகத் தனது அரச சேவையை ஆரம்பித்தார்.

தொடர்ந்து 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதிசிறப்பு வகுப்புக்கான பரீட்சையில் திறமைச் சித்தி பெற்று திருக்கோவில் பிரதேச சபையிலும் பின்னர் நாவிதன்வெளி பிரதேச சபையிலும் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இலங்கை நிருவாக சேவை  பரீட்சையிலும் சித்தியடைந்து திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாணக் காணி நிருவாகத் திணைக்களத்தின் உதவிக் காணி ஆணையாளராக  சேவையாற்றியுள்ளார்.

மேலும்,இவர்  கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் பொது முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X