2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புதிய நீரிணைப்பு பெறுதில் சிக்கல்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே. றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் புதிய நீரிணைப்பினைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அட்டாளைச்சேனை அலுவலகமே இவ்வாறு அசமந்தப் போக்குடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
புதிய இணைப்புக்காக விண்ணப்பித்து அதற்கான உரிய கட்டணத்தையும் செலுத்தி பல நாட்கள் கடந்தும் புதிய இணைப்புக்கள் வழங்குவதில் காலதாமதம் காட்டப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இது விடயமாக அட்டாளைச்சேனை பிரதேச தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அலுவலக பொறுப்பதிகாரி யூ.எல்.சீ. காசிம்பாவாவிடம் கேட்டபோது, 
 
'நீர்வழங்கல் நடவடிக்கை மற்றும் திருத்த வேலைகள், பராமரிப்பு நடவடிக்கையின் பொருட்டு உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் போக்குவரத்துக்காக எமது காரியாலயத்துக்கு வழங்கப்பட்டிருந்த வான் எந்த விதக் காரணமும் இன்றி அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தினால் மீளப் பெறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கான சேவையை துரிதமாக மேற்கொள்ள முடியாதுள்ளது.
 
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான காரியாலத்துக்கு இதுவரை 20 புதிய நீர்வழங்கல் இணைப்புக்கள் வழங்கப்படாமல் உள்ளன. இவற்றைப் படிப்படியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X