2025 மே 21, புதன்கிழமை

பாதசாரியின் உயிரிழப்புக்கு காரணமான சாரதிக்கு மறியல்

Gavitha   / 2016 மார்ச் 25 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை பாண்டிருப்பு தாளவட்டான் சந்தியில் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்ற விபத்துக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் வியாழக்கிழமை (24) உத்தரவிட்டுள்ளார்.

வீதியை கடக்க முற்பட்ட பாதசாரியை லொறியால் மோதி அவர் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டிருந்தார்.

பாண்டிருப்பைச் சேர்ந்த தங்கரூபன் நற்குணம் (வயது-58) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .