2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை, கல்லரைச்சல் கிராம மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நடவடிக்கை அங்கு  செவ்வாய்க்கிழமை (19) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'கடந்த காலத்தில்; அபிவிருத்தி செய்யப்படாமலுள்ள பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்து மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன' என்றார்.  

'சமூகம் சார்ந்த அமைப்புகள் அற்பசொற்ப இலாபங்களுக்காக சோரம் போகக்கூடாது. சமூகம் சார்ந்த நல்ல விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்' எனவும் கூறினார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சஹ்பீர், கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்.எம்.சரீப் முகம்மட், கிராம சேவகர் எம்.ஏ.சித்தி பஸ்றியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X