2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பாராட்டு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 10 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து தேசிய நிலைத் தமிழ்மொழித்தினப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு,  அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய பிரதேசங்களிலிருந்து தேசியநிலைத் தமிழ்மொழித்தின போட்டிகளில்; 2013, 2014, 2015ஆம் ஆண்டுகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற 62 மாணவர்களும் பயிற்றுவித்த 39 ஆசிரியர்களும் நேரடியாக மாணவர்களை தெரிவுசெய்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கிய 7 அதிபர்களும் இதேபோல் செயற்பட்ட 4 பிரதி அதிபர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம், விசேட அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராஜா ஆகி;யோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாகாண கல்விப் பணிப்பாளர் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.ஹனிபாவினால் வாழ்த்துப்பத்திரம் வழங்கி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .