2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

Niroshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

தம்பிலுவில் றேஞ்சஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அம்பாறை,திருக்கோவில் கோட்டத்துக்குட்பட்ட 05 பாடசாலைகளைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திப் பெற்ற 22 மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை  தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது,திருக்கோவில் கோட்டத்துக்குட்பட்ட கலைமகள் வித்தியாலயத்தில் 09 பேரும் சரஸ்வதி வித்தியாலயத்தில் 03 பேரும் அருனோதயா வித்தியாலயத்தில் ஒருவரும் கனகநகர் வித்தியாலயத்தில் 05 பேரும் தம்பட்டை செம்மன்பிள்ளை வித்தியாலயத்தில் 04 பேரும் பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன் கற்பித்த ஆசிரியர்களும் றேஞ்சஸ் விளையாட்டுக் கழகத்தினரால் பாராட்டி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X