2025 ஜூலை 05, சனிக்கிழமை

பாராட்டு விழா

Niroshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

கிழக்கு மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற தேசிய மீலாத் பேச்சுப் போட்டியில்  மாகாண மட்டத்தில் 2ஆவது இடத்தைப் பெற்ற ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலய மாணவன் வஹாப்தீன் தானிஸ் முகம்மட்டை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலய திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.

பாடசாலையின் பிரதி அதிபர் எம்.எல்.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் உயர்தர மற்றும் சாதாரண தரப்பிரிவு வலயத்தலைவர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது,பாடசாலையின் பிரதி அதிபர் எம்.எல்.எம்.இஸ்மாயில் உரையாற்றுகையில்,

மாணவர்கள் பாடசாலைக் கல்வியோடு மாத்திரம் இருந்து விடாமல் இதற்கு புறம்பாக பாடசாலை மட்டங்களில் நடைபெறுகின்ற இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.

மேலும் பாடசாலை மட்டங்களில் நடைபெறுகின்ற விளையாட்டு மற்றும் இதர போட்டி நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு எமது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும்.

ஒரு மாணவன் இவ்வாறான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தும் போது அவனது கல்வி  முன்னேற்றத்துக்கும் எதிர்கால கல்விச் செய்ற்பாடுகளுக்கும் இணைப்பாட விதான செயற்பாடுகள் முக்கியத்துவமிக்கதாக விளங்குகின்றது.

எனவே, ஒரு மாணவன் பாடசாலைக் கல்வியோடு மாத்திரம் நின்று விடாமல் பாடசாலை மட்டத்தில் நடைபெறுகின்ற இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் ஈடுபாடுகாட்டினால் எதிர்கால கல்வி முன்னேற்றத்துக்கு இவ்வாறான போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்று கிடைக்கப் பெறுகின்ற தராதரப்பத்திங்கள் ஒரு மாணவரது உயர்கல்வி முன்னேற்றத்துக்கு பெரிதும் உந்து சக்தியாக அமையும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .