2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பொறியியல்பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 07 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல்பீடத்தின்; இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளதாக அப்பல்கலைக்கழக பொறியியல்பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன் தெரிவித்தார்.

முதலாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

விடுதி வசதி, விரிவுரையாளர்கள் வசதி, ஆய்வுகூட வசதி, சிற்றுண்டிச்சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பொறியியல்பீட மாணவர்கள் கடந்த இரு மாதங்களாக வகுப்பு பகிஷ்கரிப்பு மேற்கொண்டு வந்தனர். இதனால், இம்மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினருக்கும் மாணவப் பிரதிநிதிகளுக்குமிடையில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற  பேச்சுவார்த்தையை அடுத்து, மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பை கைவிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X