2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பிறப்பு, இறப்பு பதிவாளராக கபூர் நியமனம்

Niroshini   / 2016 மே 16 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை,  அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்கான  பிறப்பு, இறப்பு பதிவாளராக  ஏ.ஜி.ஏ.கபூர்  பதிவாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டள்ளார்.

இம்மாதம் 10ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ள இவர் நியமனக்கடிதத்தினை  அம்பாறை மாவட்ட  பதிவாளரான எச்.டீ.தமித் சஞ்சீவடமிருந்து  பெற்று கடமையைபொறுப்பேற்றுக் கொண்டார்.

அக்கரைப்பற்று -3ஆம் குறிச்சியைச்சேர்ந்த இவர் ஆரம்பத்தில் நீர்ப்பாசனத் திணைக்கள அம்பாறை பிராந்திய அலுவலகத்தில் படவரைஞராகக் கடமையாற்றி, பின்  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் சேவைஅதிகாரியாகவும் மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான மாவட்டஉதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

மேலும், அகில இலங்கை சமாதான நீதவானாகவும் அக்கரைப்பற்று மத்தியஸ்த சபையின் தவிசாளராகவும் அக்கரைப்பற்று மத்தியபலநோக்குக் கூட்டுறவுச் சங்கதலைவர் மற்றும் பணிப்பாளராகவும் சனசக்தி (சனசவிய) நம்பிக்கை நிதியகடன் மதிப்பீட்டு அதிகாரியாகவும் கடயாற்றியுள்ள இவர் பல்வேறு சமூகசேவை அமைப்புக்களின் தலைவர் செயலாளராகவும் கடமையாற்றிவருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X