2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 13 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் இரண்டாயிரம் ரூபாய் போலி நாணையத்தாள் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 50 வயதுடைய மீன் வியாபாரி ஒருவரை நேற்று வியாழக்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
 
இந்த மீன் வியாபாரியிடம் நேற்றையதினம் காலை ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் போலி நாணயத்தாளைக் கொடுத்து 250 ரூபாய்க்கு மீன் வாங்கிவிட்டு மீதிப் பணத்தையும் பெற்றுச் சென்றுள்ளார்.

இந்த நாணயத்தாள் போலியானது என்பது தொடர்பில் தெரியாத குறித்த மீன் வியாபாரி, நேற்றையதினம் இரவு அந்த நாணயத்தாளைக் கொடுத்து மதுபானச் சாலையில் மதுபானம் வாங்க முற்பட்டுள்ளார். இந்நிலையில், மதுபானச் சாலையில் மீன் வியாபாரி வழங்கிய நாணயத்தாள் போலியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டு, இது தொடர்பில் தமக்குத் தகவல் வழங்கப்பட்டது.

இதனை அடுத்தே குறித்த வியாபாரியை கைதுசெய்துள்ளதுடன்,  குறித்த நாணயத்தாளையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X