2025 மே 20, செவ்வாய்க்கிழமை

போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 மே 13 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதேசத்தில் 02 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் வைத்திருந்த குற்றச்சட்டின் பேரில், நேற்று  வியாழக்கிழமை (12) இரவு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபானசாலையில் மதுபானம் கொள்வனவு செய்வதற்காகச் சென்ற மேற்படி நபர், போலி 02 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளைச் செலுத்திய போது மதுபானசாலை உரிமையாளர் இதனைக் கண்டுபிடித்து பொலிஸாருக்கு அறிவித்ததற்கமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர், காரைதீவு 11ஆம் பிரிவு 52 வயதுடைய மீன் வியாபாரி எனத் தெரிய வருகின்றது. 

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X