2025 மே 19, திங்கட்கிழமை

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைதான வைத்தியருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 22 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில்; கைதுசெய்யப்பட்ட வைத்தியரை எதிர்வரும் ஜூலை மாதம் ஏழாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல், செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் சிறுமி ஒருவர்  தனது வாயில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக தந்தையுடன்; தனியார்; கிளினிக்குச் சென்றதாகவும் இதன்போது, இச்சிறுமியை தனியாக வைத்தியர் பார்வையிடும் அறைக்கு கூட்டிச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த குறித்த வைத்தியர் முற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பில் பெற்றோரிடம் சிறுமி தெரிவித்ததைத் தொடர்ந்து, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்  முறைப்பாடு செய்தனர். இதனை அடுத்து, குறித்த வைத்தியரை திங்கட்கிழமை (20) இரவு பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X