2025 மே 22, வியாழக்கிழமை

பொலிஸ் நடமாடும் சேவை

Sudharshini   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

துறைநீலாவணை கிராம மக்களின் நன்மை கருதி களுவாஞ்சிகுடி பொலிஸாரின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையொன்று இன்று  சனிக்கிழமை  (27) துறைநீலாவணை விபுலானந்தர்; வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

 இதன்போது மருத்துவ சேவைகள், சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குதல்,  மிருகவைத்திய ஆலோசனைகள், கண்பரிசோதனை, ஆயுர்;வேத மருத்துவப் பரிசோதனைகள், பொலிஸ் முறைப்பாட்டுகள்  போன்ற பல சேவைகளை மக்கள் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக வகையில் இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் நந்லால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர்; கலாநிதி எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்;கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .