Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 04 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, பாலமுனைப் பிரதேசத்தில்; நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தமிழ்மொழிமூல விவசாயப் பாடசாலை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
விவசாயத் திணைக்களத்தின் விவசாய விரிவாக்கல் பணிப்பாளர் ஆர்.எஸ்.விஜயசேகர தெரிவிக்கையில், 'நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெரும் பங்களிப்புச்; விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு புதிய தொழில்நுட்ப ரீதியிலான விவசாய செய்கையை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் காட்டிவரும் அக்கறை மேலும் இதனை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது' என்றார்.
'மேலும், இப்பாடசாலையில் போதிக்கப்படும் கல்வி நடவடிக்கைகள் என்.வி.கியூ. மட்டம் 05 தரத்திலானதாகும். இதனை கற்கக்கூடிய மாணவர்கள் விவசாய டிப்ளோமா தாரிகளாக வெளியேறுவதோடு இவர்கள் விவசாயத் திணைக்களத்தில் இலகுவாக தொழில் வாய்ப்பை பெருவதற்குரிய வழிவகைகளும்; ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப்பாடசாலையை வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
குறைந்த வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பாடசாலையில் பௌதீகவளப் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்கு அரசியல்வாதிகள் முன்வர வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .