Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 09 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 19ஆம் திகதி அம்பாறை, பாலமுனைப் பிரதேசத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது.
இதன்போது, மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில்; கலந்துரையாடப்பட்டதாக கட்சியின் உயர்பீட உறுப்பினரும் தேசிய மாநாட்டு பிரசார ஊடகக்குழுவின் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.ஸி.யஹியாகான் தெரிவித்தார்.
மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் பணிகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உப குழுக்கள், தேசிய மாநாட்டுக்கு பேராளர்களை அழைத்து வருவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், ஏற்பாட்டுக் குழுவினருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .