2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பாலமுனை வைத்தியசாலை அபிவிருத்திக்கு ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 29 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் மூன்று மாடிக்கட்டட நிர்மாணம் மற்றும் நிழற்பிரதி இயந்திரம், அம்பியூலன்ஸ் வண்டியொன்றையும் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், அவ்வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் முன்வைத்தனர். இதன்போதே, அவர் இதனைக் கூறினார்.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையை முன்னேற்ற பாரிய திட்டத்தை முன்னெடுள்ளேன். சுகாதாரத்தை முன்னேற்றமடையச் செய்வதற்ககு கிழக்கு மாகாணசபையினால்  கிடைக்கும் நிதி மட்டும் போதாது. இதற்காக மத்திய அரசாங்கத்தின் உதவியையும் நாடவேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X