2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பாலமுனை, ஹிறா நகர் கிராமத்தில் காட்டு யானை அட்டகாசம்

Niroshini   / 2015 நவம்பர் 17 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை ஹிறா நகர் மீள் குடியேற்றக் கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள்  தென்னை மரங்கள் மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்களை  சேதப்படுத்தியுள்ளன.

அண்மைக்காலமாக பாலமுனை ஹிறா நகர் மீள் குடியேற்றக் கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இக்கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் யானையின் தொல்லையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்.அச்சம் காரணமாக சொந்த இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து செல்லக் கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக அக்கிராமத்தில் வசிக்கின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி கிராமத்துக்குள் இரவு வேளைகளில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகள் அங்குள்ள  வீட்டுத் தோட்டப் பயிர்களை துவம்சம் செய்து சேதப்படுத்தி வருவதுடன் வீடுகளையும் உடைத்து வீடுகளுக்குள் இருக்கும் நெல் மூட்டைகளையும் உட்கொள்கின்றன.

இவ்வாறு தொடர்ந்தும் யானைகளின் அட்டகாசம் தொடருமானால் இக்கிராமத்தை விட்டு உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று தஞ்சயமடைய வேண்டிய சூழ்நிலை உருவாகும் என பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .