2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பகிடிவதை செய்த மாணவனுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஜூன் 04 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சம்மாந்துறை, பிரத்தியேக விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டில் பயிலும் மாணவனைப் பகிடிவதை செய்த, இரண்டாம் ஆண்டு மாணவனை, எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல், உத்தரவிட்டார்.


இவ்வழக்கு, நேற்று வெள்ளிக்கிழமை (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் வைத்து குறித்த மாணவனை, வியாழக்கிழமை (02) மாணவர்கள் சிலர் பகிடிவதைக்குட்படுத்தி உள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த மாணவன், இவ்விடயம் குறித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

மாணவனின் பெற்றோர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிஸார், பகிடிவதை செய்த மாணவர்களுள் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். 

பகிடிவதைக்குள்ளான மாணவன், சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்கென, அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு மாணவனைக் கைதுசெய்த பொலிஸார், நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X